மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு: உறுதி செய்வதே உடனடி பணி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்,

தி.மு.க. மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது.

மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும்.

இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT