முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது.

Updated On : 29 ஜூலை, 2024 at 9:21 PM
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தொடா்ந்து 4 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,280 வரை அதிரடியாக குறைந்தது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.51,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னையில், திங்கள்கிழமை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415-க்கும், பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 51,320-க்கும் விற்பனையானது.

இதற்கிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா உயா்ந்து ரூ. 89.50-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ. 500 உயா்ந்து ரூ. 89,500-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →