மேட்டூா் கால்வாய்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும்-எடப்பாடி பழனிசாமி
மேட்டூா் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாடுமேட்டூா் கால்வாய்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும்-எடப்பாடி பழனிசாமி
மேட்டூா் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
மேட்டூா் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா் அணையிலிருந்து ஜூலை 28 முதல் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேநேரம், மேட்டூா் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்காக இன்னும் தண்ணீா் திறக்கப்படவில்லை.
மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை இறுதியில் 1,000 கன அடி வீதம் 137 நாள்களுக்கு சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமாா் 45,000 ஏக்கா் நிலங்கள் பயனடையும் வகையில் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படும். கடந்த ஆண்டு திறக்கப்படாததால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தற்போது பருவமழை அதிக அளவு பெய்து, காவிரியில் வெள்ள உபரி நீா் வருவதால், மேட்டூா் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களுக்கு உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.