தமிழ்நாடு

தியானம் நிறைவு: வெளியே வந்தார் பிரதமர் மோடி

விவேகானந்தர் பாறையில் அமர்ந்து 45 மணி நேரம் மேற்கொண்ட தியானம் நிறைவு

DIN

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தனது 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்துகொண்டு, வெளியே வந்தார்.

விவேகானந்தர் மண்டபத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்றடைந்தார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்த பிரதமர் மோடி, வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தனது தியானத்தைத்தொடங்கினார். முதல் நாள் தியானத்தை நிறவு செய்த பிறகு, அங்கு அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

பின்னர் இரண்டாவது நாள் தியானத்தை சூரிய வழிபாட்டுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கினார்.

இன்று காலை மீண்டும் சூரிய வழிபாடு நடத்திவிட்டு, விவேகானந்தர் மண்டபத்தை வளம்வந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்துகொண்டு வெளியே வந்தார். விவேகானந்தர் பாறையிலிருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பார்வையிட்டார். 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், மூன்று நாள் தியான நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டார். கடந்த மூன்று நாள்களாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி கடல் பகுதியில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

சுவாமி விவேகானந்தர் 1892ஆம் ஆண்டு கன்னியாகுமரிரயில் உள்ள இதே பாறையில் 3 நாள்கள் தியானம் செய்த பிறகு அமெரிக்காவின் சிகாகோ ஆன்மிக மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.

இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடியும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட தீர்மானித்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேராக அவர் வியாழக்கிழமை குமரி வந்து 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்து கொண்டு சனிக்கிழமை மாலை தில்லி செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT