தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ. 53,328-க்கு விற்பனையாகிறது.
மேலும் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.6,666க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசு குறைந்து ரூ.97.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.