சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.7600 குறைந்துள்ளது.
அதன்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.2,800 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,26,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.15,850க்கு விற்பனையாகிறது. காலையில் தங்கம் விலை ஒரு கிராமிற்கு ரூ.600 குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.350 குறைந்துள்ளது.
வெள்ளியைப் பொறுத்தவரை சென்னையில் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.4,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும கிராமுக்கு வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.405க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.