தமிழ்நாடு

நாளை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்!

கோடை விடுமுறையையொட்டி நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.

DIN

கோடை விடுமுறையை முன்னிட்டு நாளை (ஜூன் 4-ம்) தேதி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

வண்டலூர் உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துவருகின்றனர்.

இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும் என்றும், வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் நெகிழி பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT