சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள்.
அவரது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளா்ச்சியையும் தந்து, மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.