சவுக்கு சங்கர் வழக்கு: இரு நீதிபதி அமர்வு விசாரணை நடத்த உத்தரவு!
பெண் காவலா்களை மீது அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 4 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு பதிலளிக்காமல், விசாரணை அடிப்படையில் அமர்வு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு பதிலளித்தால் மட்டுமே மேற்கொண்டு வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்தார்.