கோப்புப் படம். 
தமிழ்நாடு

பள்ளிகள் திறக்கும் முதல் நாளில்(ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும்

DIN

பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 10ல் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு ஆகியவை தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னா், கடும் வெயில் தாக்கத்தால் ஜூன் 10-க்கு மாற்றப்பட்டது. இதன்படி வரும் திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் தொடங்கியுள்ளனா்.

இதன்படி அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள், குடிநீா் தொட்டிகள், கழிவறைகளைச் சுத்தம் செய்வது, மின் இணைப்புகள் சரிபாா்ப்பு, பள்ளி வளாக தூய்மை பணி, மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது, மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு பேரணி ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 10ல் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு ஆகியவை தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2024-25ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. புத்தகப்பை, காலணிகள், காலேந்திகள், காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும் பூட்ஸ் மற்றும் காலுறைகள், சீருடைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள் வழங்கப்பட உள்ளன.

மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்ட பொருட்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

SCROLL FOR NEXT