முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

திமுக கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திமுக கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தமிழ்நாடு

திமுக கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திமுக கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Updated On : 8 ஜூன், 2024 at 2:20 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

திமுக எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் கலைஞருக்கு நூற்றாண்டு நிறைவு விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.

நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு கோரிக்கை விடுக்கவும் முடிவு.

நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →