கோப்புப் படம். 
தமிழ்நாடு

மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது: புஸ்ஸி ஆனந்த்

DIN

மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் விஜய் அறிவிப்பார் என்றும் மதுரையில் த.வெ.க.மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்- யின் 50 வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை ஓடைப்பட்டியில் 550 நபருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதி தான்.

அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர் தான் தெரிவிப்பார். விஜயின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது செய்யவும் மாட்டோம்.

விஜய் மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT