தமிழ்நாடு

ராயன் ரிலீஸ் தேதி மாற்றம்; ரசிகர்கள் ஏமாற்றம்!

ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக நடிகரும் இயக்குநருமான தனுஷ், தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து பதிவிட்டுள்ளார். முன்பு அறிவித்திருந்த வெளியீட்டு தேதிக்கு இன்னும் 3 நாள்களே உள்ளநிலையில், படக்குழுவினரின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT