தமிழ்நாடு

முன்னதாக தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்னதாக தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

DIN

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

நெல்லையில் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களுடன் பேசியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதிக்கு பதிலாக வரும் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், விளங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் சட்டப்பேரவை தலைவர் அறையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு சட்டப்பேரவை விதிகள் குழு கூடுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூறடுகிறது. அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது? என்னென்ன மானிய கோரிக்கைகளை எந்தெந்த தேதிகளில் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அந்த மாவட்டத்திற்கான நலத்திட்ட உதவிகள் மட்டும் அறிவிக்கப்படாது என்றார்.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பேரவை மீண்டும் ஜூன் 24-ல் கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னதாக அறிவித்து இருந்த நிலையில், தற்போது முன்னதாகவே ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT