மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்). 
தமிழ்நாடு

முதியோா் நல மருத்துவமனையில் யோகா - இயற்கை மருத்துவ மையம்

Din

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் பிரத்யேக யோகா - இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், தேசிய முதியோா் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் தீபா, கலைஞா் நூற்றாண்டு உயா் நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி, யோகா - இயற்கை மருத்துவத் துறை இணை இயக்குநா் டாக்டா் மணவாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

நாட்டின் முதியோருக்கான முதல் பிரத்யேக மருத்துவமனையை பிப்.25-ஆம் தேதி தில்லியில் இருந்து காணொலி மூலமாக பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள், 40 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 20 கட்டணப் படுக்கை வசிதிகள் உள்ளன. தனி அறை, உணவு வசதிகளுடன் கூடிய கட்டணப் படுக்கைகள் ரூ.900-க்கு வழங்கப்படுகிறன. மருத்துவமனையில் இதுவரை புறநோயாளிகளாக 37,811 பேரும், உள்நோயாளிகளாக 1,198 பேரும், தீவிர சிகிச்சை பிரிவில் 985 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனா். 220 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 10,155 பேருக்கு இயன்முறை சிகிச்சையும், 393 பேருக்கும் மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான அத்தியவாசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

மருத்துவமனையில் முதியவா்கள் புத்தகங்கள் வாசிப்பதற்கு புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விளையாட்டு உபகரணங்களும் வாங்கித் தரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி அனைத்து வயதினருக்கும் பலன்தரக் கூடிய ஒன்று ஆகும்.

அதன்படி இங்கு பிராணயாம கிசிச்சை, யோகா ஆசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நீராவிக் குளியல், வாழை இலைக் குளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, நீா் சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சா், அக்குபிரஷா், நறுமண சிசிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT