விபத்தில் நொறுங்கிய கார். 
தமிழ்நாடு

பரமத்தி வேலூர்: சிறார் ஓட்டிய கார் விபத்து; இருவரும் பலி!

ஆம்னி காரில் வந்த இரு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலி.

DIN

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (45). இவரது மகன் லோகேஷ் (17), அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷின் (42) மகன் சுதர்சன் (14). இவர்கள் தற்பொழுது குடும்பத்துடன் கபிலர்மலை பரமத்தி செல்லும் சாலையில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் சுதர்சன் இருவரும் ஆம்னி காரை எடுத்துக்கொண்டு திங்கள்கிழமை இரவு பரமத்தி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கபிலர்மலை செல்ல ஜேடர்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த காரும் சிறுவர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் லோகேஷ் மற்றும் சுதர்சன் இருவரும் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பலியான சிறுவர்கள் லோகேஷ், சுதர்சன்

நிகழ்விடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் காவல்துறையினர் சிறுவர்களின் உடலை வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிறுவர்கள் ஓட்டி வந்த ஆம்னி கார் அப்பளம் போல் நொறுங்கி இருவேறு பகுதியாக கிடந்தது.

மேலும் மற்றொரு காரில் வந்த கபிலர்மலை அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞருக்கு பதவி நீட்டிப்பு

SCROLL FOR NEXT