பாபநாசம் அருகே ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
குழி தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பாபநாசம் அருகே பொன்னாலான ஐம்பொன் சிலைகள் மற்றும் சோடசவ் உபசாரம் போன்ற 10 பொருள்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கோயில் தேவராயன்பேட்டை சிவன்கோயில் அருகே ஆபிஸர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பைசல் (43).
இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோன்றினார். இரண்டு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், மூன்றாவது குழி தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக முகமது பைசல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு நிலத்தில் புதைந்திருந்த சோமஸ்கந்தர், சந்திரசேகரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சிலைகளையும், தூபக்கால் போன்ற பொருள்களான தட்டு, பீடம் உள்ளிட்ட பூஜைக்குத் தேவையான பல்வேறு பொருட்களைக் கண்டெடுத்தனர். மேலும் பள்ளங்களைத் தோண்டி சிலைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.