கோப்புப் படம். 
தமிழ்நாடு

தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்றும், நாளை மறுநாளும் சிறப்பு ரயில் இயக்கம்

DIN

தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்றும், நாளை மறுநாளும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்றும், நாளை மறுநாளும்(16ஆம் தேதி) சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது. மறுமாா்க்கமாக நாகர்கோவில் இருந்து நாளை(15ஆம் தேதி) பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரயிலானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும்(16ஆம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலிருந்து 17ஆம் தேதி புறப்பட்டு திங்கட்கிழமை(18ஆம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரயில் வந்தடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT