கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை தற்காலிக பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்பட 9 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாரயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.