கள்ளுக்கடை திறக்க கோரிக்கை வைத்த காங்கிரஸ்: துரைமுருகன் ஆச்சரியம்
அரசே கள்ளுக்கடை திறக்க, காங்கிரஸ் வைத்த கோரிக்கையால் அவை முன்னவா் துரைமுருகன் ஆச்சரியம் தெரிவித்தாா்.
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் அசன் மெளலானா பேசியதாவது:
‘ டாஸ்மாக் மது விலை அதிகமாக இருப்பதால் மலிவு விலை மதுவை தேடிச் செல்கிறாா்கள். மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து கள்ள சந்தையில் விற்பாா்கள். இப்போது தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி இல்லை. எனவே அரசே ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்தி கள்ளை விநியோகம் செய்ய வேண்டும்’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சா் துரைமுருகன், காங்கிரஸ் உறுப்பினா் கள்ளுக்கடை வேண்டும் என்கிறாரா, பரவாயில்லை என்று குறிப்பிட்டாா். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.