முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் ஆண்டுக்கு ரூ.150 கோடி காங்கிரஸ் கொள்ளை! அமித் ஷா குற்றச்சாட்டு!

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சி நடத்திய 15 ஆண்டுகளில் மாநில சுகாதார பட்ஜெட்டில் இருந்து அக்கட்சி ஆண்டுக்கு ரூ.150 கோடியை கொள்ளையடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 15 மார்ச், 2026 at 9:47 PM
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா (இடது) உள்ளிட்டோர்.
பகிர்:

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சி நடத்திய 15 ஆண்டுகளில் மாநில சுகாதார பட்ஜெட்டில் இருந்து அக்கட்சி ஆண்டுக்கு ரூ.150 கோடியை கொள்ளையடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் ரூ.2,092 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் அவர் பேசிய

தாவது:

பத்தாண்டுகளுக்கு முன்பு அஸ்ஸாமின் சுகாதாரத் துறை பலவீனமாக இருந்தது. ஏனெனில் அப்போது இந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தனது தலைவர்களின் குடும்பங்களின் நிதி ஆரோக்கியத்துக்காக மட்டுமே பாடுபட்டது.

அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சி நடத்திய 2016}ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறையில் ஊழல் நடைபெற்றது. அக்கட்சி ஆட்சியில் இருந்த 15 ஆண்டுகளில் மாநில சுகாதார பட்ஜெட்டில் இருந்து ஆண்டுக்கு ரூ.150 கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்தது.

பிறக்காத 9 லட்சம் குழந்தைகளுக்காகவும், கட்டப்படாத 390 அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த நிதி செலவிடப்பட்டதாக பொய்க் கணக்கு காட்டப்பட்டது.

அஸ்ஸாமில் பாஜகவைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வராக பதவியேற்ற பின் இந்த மாநிலத்தின் மருத்துவ வசதிகளை குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இணையாக அவர் கொண்டுவந்தார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்த விலையில் மருத்துவச் சேவைகள் கிடைப்பதற்காக பாஜக பாடுபடுகிறது. பத்தாண்டுகளில் மருத்துவச் சேவையிலும் கல்வித்துறையிலும் அஸ்ஸாம் தன்னிறைவை எட்டியுள்ளது.

பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் எதிர்க்கும் தனது முயற்சியில் இந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எந்த இந்தியரும் ஆதரிப்பதில்லை.

புது தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் காங்கிரஸார் சட்டை அணையாமல் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

நாங்களும் (பாஜகவினர்) எதிர்க்கட்சியாக இருந்து அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் அதற்குரிய மேடையிலேயே அதைச் செய்தோம்.

நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்துக்கான புனிதமான இருக்கையாகும். அதன் பகுதிகள் மறியல் போராட்டம் நடத்த பயன்படுத்தப்படக் கூடாது. நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி பக்கோடா சாப்பிட்டது சரியான செயல் அல்ல என்றார் அவர்.

இதனிடையே, குவாஹாட்டியில் பாஜகவின் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: "அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவுக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்.

ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் புகலிடம் அளித்தது. ஆனால் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு வெளியேற்ற பாஜக உறுதிபூண்டுள்ளது' என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →