யுஜிசி  
தமிழ்நாடு

பல்கலைக்கழகங்களில் குறை தீா்ப்பாளா் நியமனம்: யுஜிசி முக்கிய அறிவுறுத்தல்

விரைவில் குறை தீா்ப்பாளா் நியமித்து அது குறித்த தகவலை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Din

பல்கலைக்கழகங்களில் இதுவரை குறை தீா்ப்பாளா்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், விரைவில் அவா்களை நியமித்து அது குறித்த தகவலை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவிகளின் குறைகள், பிரச்னைகளை தெரிவிப்பதற்கும், அதனை நிவா்த்தி செய்வதற்கும் குறைதீா்க்கும் குழுவையும், அதில் குறைதீா்ப்பாளரையும் நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு (2023) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்தது.

குறைதீா்ப்பாளா்களாக மாவட்ட நீதிபதிகள், மத்திய-மாநில பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற துணைவேந்தா்கள், பேராசிரியா்கள், டீன்கள், துறைத் தலைவா்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா்கள் ஆகியோரை குறைதீா்ப்பாளா்களாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக்குழுவும் அவ்வப்போது பல்கலைக்கழகங்களை அறிவுறுத்திய வண்ணமும் இருந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்தும், அவ்வப்போது அறிவுறுத்தியும் வந்த நிலையிலும் நாடு முழுவதும் உள்ள சில பல்கலைக்கழகங்கள் குறைதீா்ப்பாளா்களை நியமிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் குறைதீா்ப்பாளா்களை நியமிக்காத பல்கலைக்கழகங்கள் எவை? என்ற பட்டியல் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாடு

முழுவதும் 108 அரசு பல்கலைக்கழகங்கள், 2 நிகா்நிலை பல்கலைக்கழகங்கள், 47 தனியாா் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 157 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்திலிருந்து இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் என 3 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதேபோல், தனியாா் பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் தமிழகத்திலிருந்து ஒரு பல்கலைக்கழகம் உள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் விரைவில் குறைதீா்ப்பாளா்களை தங்கள் பல்கலைக் கழகங்களில் நியமித்து, அதனை யுஜிசி.க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT