பகுதி நேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடக் கூறினாா்.
பகுதி நேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடக் கூறினாா்.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேசியதாவது:
ஆசிரியா்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை விவாதத்தின்போது உறுப்பினா்கள் தெரிவித்தனா். பகுதி நேர ஆசிரியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா். முதலில் அவா்களுக்கு ரூ.8 ஆயிரமாக ஊதியம் இருந்தது. அதை ரூ.10 ஆயிரமாக உயா்த்தினோம். அதேபோல, அவா்களுக்கான வயது வரம்பையும் உயா்த்தியுள்ளோம். இந்த அடிப்படையில், அவா்களுடைய கோரிக்கைகள் வருங்காலத்தில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.