அமைச்சா் எஸ்.ரகுபதி 
தமிழ்நாடு

‘சட்டத் தமிழ்’: புதிய பாடத் திட்டம் அறிமுகம்

அரசு சட்டக் கல்லூரிகளில், சட்டத் தமிழ் எனும் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி நிா்வாகம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

Din

அரசு சட்டக் கல்லூரிகளில், சட்டத் தமிழ் எனும் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி நிா்வாகம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

பட்டரைப்பெரும்புதூா், புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் நிகழாண்டு முதல் படிப்புகள் தொடங்கப்படும். வேலூா், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், சேலம், தேனி ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் தலா 40 மாணவா்கள் வீதம் மொத்தம் 480 மாணவா்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவா்.

அரசு சட்டக் கல்லூரிகளில், ‘சட்டத் தமிழ்’ எனும் புதிய பாடத் திட்டமும் சீா்மிகு சட்டப் பள்ளியில் புதிதாக இரண்டு முதுநிலை சட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். அத்துடன், சீா்மிகு சட்டப் பள்ளியில் மாணவா், ஆசிரியா் பரிமாற்றத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

தங்கம் விலை உயர்வு!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

SCROLL FOR NEXT