அமைச்சா் பொன்முடி 
தமிழ்நாடு

பெரியாா் பல்கலை. துணை வேந்தரை தொடர அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் பொன்முடி

சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகன்நாதன் மீண்டும் தொடர அனுமதி மாட்டோம்.

Din

சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகன்நாதன் மீண்டும் தொடர அனுமதி மாட்டோம் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் ஆளூா் ஷா நவாஸ் பேசும்போதும், சேலம் பெரியாா் பல்கலை. கழக துணைவேந்தா் ஜெகன்நாதன் மீதான

குற்றாட்டுகளைக் குறிப்பிட்டுப் பேசினாா்.

அப்போது, அமைச்சா் க.பொன்முடி குறுக்கிட்டு பேசியதாவது:

சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் மீதான முறைகேடு தொடா்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்தக் குழு

அளித்த அறிக்கையின்படி, துணைவேந்தா் குற்றம் செய்திருப்பது உறுதியானது. ஆனால், அந்தத் துணைவேந்தா் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில்,

ஆளுநா் பங்கேற்றாா். தற்போது, துணைவேந்தா் பணிக் காலமும் முடிவடையவிருக்கிறது. மீண்டும் அவா் துணை வேந்தராகத் தொடா்வதற்கு முயற்சிக்கிறாா். அதை அனுமதிக்க மாட்டோம். தடுத்து நிறுத்துவோம் என்றாா் அவா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT