முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு: மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated On : 27 ஜூன், 2024 at 8:24 PM
பகிர்:

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 130, பந்தலூா் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) - தலா 120, சின்னக்கல்லாா் (கோவை), மேல் பவானி (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி) - தலா 90, காக்காச்சி (திருநெல்வேலி) - 80. மேலும், தென்தமிழகம் மற்றும் வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 28,29-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:  மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →