சுதா மூர்த்தி Center-Center-Bangalore
தமிழ்நாடு

ஆணும் பெண்ணும் சமம், ஆனால்.. : சுதா மூர்த்தியின் கருத்து

ஆணும் பெண்ணும் சமம்தான், ஆனால் அவர்கள் வெவ்வேறானவர்கள் என்கிறார் சுதா மூர்த்தி

DIN

என்னுடைய பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்தான், ஆனால் வெவ்வேறு விதத்தில் என்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி.

மேலும், ஆணும் பெண்ணும் ஒரு சைக்கிளின் இரண்டு சக்கரங்களைப் போல ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், ஒருவர் ஒத்துழைப்பு அல்லாமல் மற்றொருவர் முன்னேற முடியாது என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார் சுதா மூர்த்தி.

எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி அண்மையில் தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோ, பாலின சமத்துவம் குறித்த சுதா மூர்த்தியின் பார்வையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அவர் ஆண்களையும் பெண்களையும் "ஒரு மிதிவண்டியின் இரண்டு சக்கரங்களுடன்" ஒப்பிட்டுள்ளார். இரு சக்கரங்களைப் போல ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், ஒரு சக்கரத்தின் ஒத்துழைப்பு அல்லாமல் மற்றொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது.

இரண்டு பாலினத்தவர்களும் வெவ்வேறானவர்கள், இருவருக்குமே பலமும் பலவீனமும் இருக்கும். வாழ்க்கை என்பது சைக்கிள் போன்றது, ஒரு சக்கரம் ஆணாகவும், மற்றொரு சக்கரம் பெண்ணாகவும் இருக்கும். இருவருமே சேர்ந்துதான் இயங்க வேண்டும்.

ஆண்களை விடவும் பெண்கள் மிக வித்தியாசமாகப் உருவாக்கப்பட்டுள்ளனர் என்கிறார் அவர், அதாவது பெண்கள் பொதுவாக மொழிகளில் மிகவும் திறமையானவர்கள், அதுமட்டுமல்ல, பெண்கள் சிறந்த மேலாளர்களாக இருப்பார்கள், இரக்கமுள்ளவர்கள் மற்றும் கொடுக்கும் பண்புடையவர்கள். அவர்கள் அன்பு, பாசம் என அனைவருக்கும் அன்பைக் கொடுப்பார்கள்.

அதேவேளையில், ஆண்கள் வித்தியாசமானவர்கள் "அவர்கள் வித்தியாசமாக பின்னப்பட்டவர்கள், அவர்களின் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை பெண்களைப் போல இருக்காது, அவர்களுக்கு நல்ல புலனாய்வு அறிவு இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக நல்ல உணர்வுப்பூர்வமான அணுகுமுறை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் நல்ல கருத்துகளை தெரிவித்து வருகிறார் சுதா மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை ஒன்றே போதும்... அஞ்சு குரியன்!

மயிலாடுதுறை: குறைதீா் கூட்டத்தில் 287 மனுக்கள்

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி பங்குகளை ரூ.676 கோடிக்கு விற்பனை செய்த ஜிக்யூஜி பார்ட்னர்ஸ்!

முதல் டி20: தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா - 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இளமை வாசம்... அனுஷ்கா சென்!

SCROLL FOR NEXT