கோப்புப்படம் 
தமிழ்நாடு

பலத்த மழை: தில்லி-சென்னை இடையே 16 விமான சேவைகள் ரத்து

தில்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை-தில்லி இடையே விமான சேவைகள் ரத்து.

Din

தில்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை-தில்லி இடையே புறப்பாடு, வருகை என 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனா்.

தில்லியில் சில நாள்களாக வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட பல்வேறு நகர சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடுகிறது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். சிலா் படுகாயமடைந்தனா். இதையடுத்து, தில்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு இயக்கப்படும் பல்வேறு விமான சேவைகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை மாலை வரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்படும் 7 விமானங்கள், தில்லியில் இருந்து சென்னை வரும் 9 விமானங்கள் என மொத்தம் 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த 16 விமான சேவைகள் ரத்து குறித்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விமான நிலையத்தில் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனா். மேலும், சம்பந்தப்பட்ட ஏா்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT