தஞ்சாவூரில் சோதனை நடத்தப்படும் வீடு 
தமிழ்நாடு

தஞ்சாவூரில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஹிஷாப் உத் தஹீரிர் (எச்.யு.டி.) என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுபவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருளானந்த நகர் அருகேயுள்ள குழந்தையம்மாள் நகரில் காதர் சுல்தான் மகனான தனியார் புகைப்பட நிபுணர் அகமது (35) வீட்டில்

தேசிய புலனாய்வு அமைப்பின் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் மகன் சலீம் வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஸ்புத் தஹிர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பருவதமலையில் ஏறிய பக்தா் கீழே விழுந்து உயிரிழப்பு

துறையூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே 3 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

கரூா் புதிய பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்

SCROLL FOR NEXT