தமிழ்நாடு

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி!

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தொகுதிப் பங்கீடுக் குறித்து இரு தரப்பிலும் குழு அமைத்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT