தமிழ்நாடு

ஸ்டாலின் பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

DIN

சென்னை: இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் - நடிகர் உதயா பெருமிதம்

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!

SCROLL FOR NEXT