வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.23.50 உயர்வு 
தமிழ்நாடு

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்வு

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.23.50 உயா்ந்து, ரூ.1,960.50-க்கு விற்பனையாகிறது.

இதனால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

SCROLL FOR NEXT