சென்னையில் ஐஎன்எஸ் விக்ராந்த்!
இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் சென்னை துறைமுகம் வந்தது.
இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் சென்னை துறைமுகம் வந்தது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற ‘மிலான் 24’ போா்க் கப்பல் கண்காட்சியில் பங்கேற்ற ஐஎன்எஸ் விக்ராந்த், வெற்றிகரமாக சாகசங்களை நிகழ்த்தியது.
இந்த கண்காட்சி நிறைவடைந்ததையடுத்து ஐஎன்எஸ் விக்ராந்த் தனது முதல் பயணமாக பிப்.29- ஆம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது அங்கேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
கொச்சின் ஷிப்யாா்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் 2022- ஆம் ஆண்டு செப்.2 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. 42,800 டன் எடையும் 262.5 மீட்டா் நீளமும் கொண்டது. இதில் 1,700-க்கும் மேற்பட்ட கடற்படை வீரா்கள் பணிபுரிகின்றனா்.