தமிழ்நாடு

கால்டுவெலின் திராவிட மொழி நூல் போலியானது: ஆளுநர் ஆர்.என். ரவி

கால்டுவெலின் திராவிட மொழி நூல் போலியானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192-வது பிறந்த நாள் நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டு 'ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, “திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் போன்றோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள்.

மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்” என ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், தனக்கு இயேசுவையும், பைபிளையும் பிடிக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT