ஜெயலலிதா  (கோப்பிலிருந்து..)
ஜெயலலிதா (கோப்பிலிருந்து..) 
தமிழ்நாடு

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை: கர்நாடக உயர்நீதிமன்றம்

DIN

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நகையை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ”ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூ. 5 கோடியை தமிழக அரசு கர்நாடகத்துக்கு வழங்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு அளிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்மா ஆங் சான் சூச்சி

மும்பையில் பலத்த காற்றுடன் மழை: விளம்பர பதாகை விழுந்ததில் பலர் காயம்!

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் முதல் ஐக்கிய அரபு அமீரக வீரர்!

பெருமை கொள்ள வைத்தவர்

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல்

SCROLL FOR NEXT