வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மீதே இப்படி ஒரு வழக்கு 
தமிழ்நாடு

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ அதிகாரி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

குட்கா வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று சிபிஐ தகவல்.

DIN

குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு குட்கா கிடங்கில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அமைச்சா்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கிடங்கில் வைத்து விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.

இந்த விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்டோரின் பெயா்களும் அடிபட்டன.

இந்த வழக்கு தொடா்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2021-ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு 19.7.2022-இல் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றும் காலஅவகாசம் கோரியும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இதே காரணத்தை இன்றைய விசாரணையின்போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், சிபிஐயின் விசாரணை அதிகாரி வருகின்ற 21-ஆம் தேதி நேரில் ஆஜராக விளக்கம் அளிக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT