தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

DIN

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்து முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினர்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே 2 ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை இன்று (மார்ச். 6) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுகவை சார்பில் கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேமுதிக சார்பில் எல்.கே. சுதிஷ், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.

2 ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும். எதிர்காலத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறும்." என்று தெவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு, அதிமுக 4 இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT