தமிழ்நாடு

அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

DIN

அவிநாசி: அவிநாசி காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழாவையொட்டி மார்ச் .8ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி, கொடியேற்றம் நடைபெற்றது.

மார்ச். 9 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகியவை நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நாளை திங்கள்கிழமை வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர், செவ்வாய்க்கிழமை கொடியிறக்கம், மஞ்சள் நீர் உற்சவம், புதன்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகள், வியாழக்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

கண் ஜாடை... லட்சுமி பிரியா!

கண்கள் பேசும்... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT