முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி! நாளை பதவியேற்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலைப் பெற்றதைத் தொடர்ந்து பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடரவுள்ளார்.

Updated On : 13 மார்ச், 2024 at 3:49 PM
பகிர்:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலைப் பெற்றதைத் தொடர்ந்து பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடரவுள்ளார்.

பொன்முடிக்கு நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

ஒரு அமைச்சர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு ஒருசில நாள்களில் மீண்டும் அமைச்சராக பதவியேற்பது தமிழக அரசியலில் முதல்முறையாக நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.