செல்வப் பெருந்தகை 
தமிழ்நாடு

திருவள்ளூர், திருச்சி, கரூர், ஆரணி - காங்கிரஸுக்கு இல்லை?

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ravivarma.s

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களுடன் நேற்று ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவள்ளூர், திருச்சி, கரூர், ஆரணி ஆகிய தொகுதிகள் இந்தமுறை அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு பதிலாக நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT