ஏப்.19ல் விளவங்கோடு இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளன்றே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இருந்து தொடங்குகிறது.