கமல்ஹாசன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முயற்சிக்கலாமா? - கமல்ஹாசன்

குறைந்தபட்சம் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முயற்சிக்கலாமா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து 18 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்தது.

அதாவது, மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை முதல் சுற்றிலும், அதைத் தொடர்ந்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை இரண்டாவது சுற்றிலும் நடத்தலாம் என்று கோவிந்த் குழு பரிந்துரைத்தது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அவரது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முயற்சிப்பதற்கு முன்பு, குறைந்தபட்சம் ஒரே கட்டம் ஒரே தேர்தல் என்பதை முயற்சிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!

SIR பணிகளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது! | செய்திகள்: சில வரிகளில் | 17.11.25

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

SCROLL FOR NEXT