SWAMINATHAN
தமிழ்நாடு

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது!

அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் இடையே கூட்டணி உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுறும் நிலையை எட்டிவிட்டது. மறுபக்கம், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியில் நீடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதிமுக – தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அதிமுக கூட்டணியில் 3 மக்களவை தொகுதிகளிலும், ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இறுதி முடிவு எட்டப்பட்டு அதிமுக மற்றும் தேமுதிக இடையே மார்ச் 20 ஆம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அதிமுக நிர்வாகிகள் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

5 மாவட்டங்களில் இன்று கனமழை!

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!

மனம் நிறைந்த ஓணம்... மாளவிகா மேனன்!

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

SCROLL FOR NEXT