போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தில்லியில் கைதான ஜாபர் சாதிக் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்.
இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தில்லியில் கைதான ஜாபர் சாதிக் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.