முகப்பு
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தரத் தடை

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 மார்ச், 2024 at 10:01 AM
கோப்புப்படம்
பகிர்:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறாா்.

எனவே, அதிமுக கட்சியின் பெயா், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் மார்ச் 12-ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு நிரந்தரத் தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →