உச்சநீதிமன்றம் 
தமிழ்நாடு

பொன்முடி பதவிப் பிரமாணம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

பதவிப் பிரமாணத்துக்கு தமிழக ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Ravivarma.s

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தார்.

முதல்வரின் கடிதத்துக்கு பதிலளிக்காமல் 4 நாள்கள் பயணமாக தில்லி சென்ற ஆளுநர் சனிக்கிழமை சென்னை திரும்பிய நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை நாளை பட்டியலிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT