முகப்பு
தமிழ்நாடு

சேலம் திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 11:36 AM
சேலம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி
பகிர்:

சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: டி.எம்.செல்வகணபதி

வயது: 65

தந்தை பெயர்: டி.எம்.முத்துசாமி

கல்வித் தகுதி: எம்.ஏ., எல்.எல்.பி.,

தொழில்: விவசாயம்

அதிமுகவில் இருந்த போது 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 1999 மக்களவைத் தேர்தலில் சேலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, 2008-ல் திமுகவில் இணைந்த செல்வகணபதி, 2010ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், ஊழல் வழக்கில் 2014ஆம் ஆண்டு தனது எம்பி பதவியை இழந்தார். இவருக்கு விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ரத்து செய்தது.

தற்போது மீண்டும் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →