கும்பகோணம் அருகே வியாழக்கிழமை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள். 
தமிழ்நாடு

9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

சுவாமிமலையில் இருந்து 9 ஐம்பொன் சிலைகள் உரிய ஆவணங்கள் கொண்டுசென்றது தெரியவந்தது.

DIN

கும்பகோணம் அருகே வியாழக்கிழமை காலை தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட அணைக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாண்டியன் தலைமையில் காவல் துறையினர் வியாழக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சுவாமிமலையில் இருந்து காரில் 9 ஐம்பொன் சிலைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படுவதும், ஆந்திர மாநிலம் வாடப்பள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுவதும் தெரிய வந்தது.

இதையடுத்து 9 சிலைகளையும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து திருவிடைமருதூர் வட்ட அலுவலகம் வட்டாட்சியர் பாக்கியராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT