முகப்பு
தமிழ்நாடு

திருச்சி அதிமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2024 at 2:10 PM
திருச்சி அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா
பகிர்:

திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ப. கருப்பையா (39) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர், தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக பதவி வகித்து வருகிறார்.

பி.காம் பட்டதாரியான கருப்பையா, கறம்பக்குடி அருகேயுள்ள குழந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.

Advertisement

2011 முதல் கறம்பக்குடி ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராகவும், 2016 முதல் 2020 வரை ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலர் பொறுப்பை வகித்தவர்.

அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார்.

மனைவி ஆர். விமலா மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.