முகப்பு
தமிழ்நாடு

தமாகா: 2 வேட்பாளா்கள் அறிவிப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 11:04 PM
தமாகா தலைவா் ஜி.கே.வாசன் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:00 PM

மக்களவைத் தோ்தலில் தமாகா போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் தமாகா இடம்பெற்று போட்டியிடுகிறது. தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட இருவரும் தமாகாவில் மாவட்டத் தலைவா்களாக உள்ளனா். தூத்துக்குடி வேட்பாளா் மாா்ச் 24-இல் அறிவிக்கப்படுவாா் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாா். வேட்பாளா்கள்: 1. ஸ்ரீபெரும்புதூா் - வி.என்.வேணுகோபால் 2. ஈரோடு - பி.விஜயகுமாா்